சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது, 52 மதுபான பாட்டில்கள் பறிமுதல்;

Update: 2025-07-21 03:54 GMT
திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வக்கம்பட்டி கல்லறை மேடு அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சவரிராஜ் மகன் ரொசாரியோ வேல்வார்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஊராளிபட்டியை சேர்ந்த நாராயணன் மகன் முத்துவீரன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News