லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

தாராபுரம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2025-07-22 03:59 GMT
தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு மற்றும் அலங்கியம் ரோடு ராம்நகர் பகுதியில், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு லாட்டரி விற்ற கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 47), கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News