குமரி மாவட்டம் மேல்புறம் சந்திப்பில் வட்டவழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் நிற்காமல் சென்றது. காரை துரத்தி சென்று பிடித்த போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். அதில் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் ஆயிரம் லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்று உண்ணாமலை கடையில் சோதனை செய்தபோது மற்றொரு காரில் இருந்து 350 லிட்டர் மன்னனையை காருடன் மடக்கி பிடித்தனர். மொத்தம் 1350 லிட்டர் மண்ணெண்ணெயை காப்புக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிட்டங்கியிலும் , வாகனத்தை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.