வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது
போலீசார் நடவடிக்கை;
வாழப்பாடி அருகே கரியகோவில் கலக்கம்பாடியில் கடந்த 16-ந் தேதி இரவு முருகேசன் என்பவரின் மோட்டார் சைக்கிளும், 29-ந் தேதி குன்னூரில் பெருமாள் என்பவரின் மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக அவர்கள் கரியகோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை தாலுகா புளியந்துறையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 21), ராஜா (23) ஆகியோர் சம்பவத்தன்று முருகேசன், பெருமாள் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது இதையடுத்து நேற்று அவர்கள் இருவரையும் கரியகோவில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு போன 2 மோட்டார் சைக்கிளும், மேலும் வேறு இடத்தில் திருடிய 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர். திருட்டு வழக்கில் துரிதமாக செயல்பட்டு 2 பேரை கைது செய்த கரியகோவில் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் பாராட்டு தெரிவித்தார்.