கோவை அருகே 2 டன் ஜெலட்டின் வெடி மருந்து கடத்தல் லாரி பிடிபட்டது!

வெடி மருந்து குச்சிகள் அடங்கிய லாரியை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிகாலை சோதனையில் பிடித்தனர்.;

Update: 2025-08-27 13:07 GMT
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கேரளாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் அடங்கிய லாரியை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிகாலை சோதனையில் பிடித்தனர். லாரி ஓட்டுநர் சுபேர் கைது செய்யப்பட்டு மதுக்கரை போலீஸ் நிலையத்தில் விசாரணை நடக்கிறது. ஜெலட்டின் குச்சிகள் கேரளா கல்குவாரிகளில் பயன்படுத்தப்படுவதாக ஓட்டுநர் கூறியுள்ளார். இதற்கு உரிய உரிமம் மற்றும் ஆவணங்கள் உள்ளனவா என்ற கேள்வியில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் மதுக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News