குட்கா விற்ற 2 பெட்டிக்கடைகளுக்கு சீல்!

வேலூரில் குட்கா விற்பனை செய்த 2 பெட்டி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.;

Update: 2025-08-29 08:22 GMT
வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 35 கிலோ குட்கா பொருட்களும், சதுப்பேரியில் உள்ள பெட்டிக்கடையில் 3 கிலோ குட்கா பொருட்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த நிலையில் வேலூர் உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாகரன் 2 பெட்டிக்கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்தக் கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்

Similar News