அருப்புக்கோட்டையில் அதிகாலையில் அரிசி செல்போன் விற்பனை கடை மற்றும் முறுக்கு என அடுத்தடுத்து இரண்டு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 2 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம்*
அருப்புக்கோட்டையில் அதிகாலையில் அரிசி செல்போன் விற்பனை கடை மற்றும் முறுக்கு என அடுத்தடுத்து இரண்டு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 2 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம்*;
அருப்புக்கோட்டையில் அதிகாலையில் அரிசி செல்போன் விற்பனை கடை மற்றும் முறுக்கு என அடுத்தடுத்து இரண்டு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 2 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சண்முகவேல் தெருவை சேர்ந்தவர் குருராஜ்(51). இவர் அருப்புக்கோட்டை பஜார் பெரிய கடை வீதியில் மாலதி டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசி மற்றும் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென பூட்டி கிடந்த இவரது கடையிலிருந்து தீ மள மளவென பற்றி எரிந்துள்ளது. மேலும் தீ வேகமாக பரவி அருகில் உள்ள பாலமுருகன் என்பவரது முறுக்கு கடையிலும் தீ பரவியது. இதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து அருகிலுள்ள கடைகளுக்கு பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் அரிசி மற்றும் செல்போன் விற்பனை கடை முற்றிலும் எரிந்து சேதமானது. அருகில் உள்ள முறுக்கு கடை பாதி அளவு எரிந்து பொருட்கள் சேதமானது. இந்த விபத்தில் அரிசி மூடைகள், செல்போன்கள், மாவு முடைகள், சீனி மூடைகள் எரிந்து சுமார் ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. பஜாரில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.