இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

*தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 29 வகையான சீர்வரிசை பொருட்களுடன் 2 ஜோடிகளுக்கு திருமணம்.*;

Update: 2025-09-14 07:05 GMT
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 29 வகையான சீர்வரிசை பொருட்களுடன் 2 ஜோடிகளுக்கு திருமணம். வையாவூர் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் இரண்டு ஜோடி இணையர்களுக்கு இலவச திருமணம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்திரவிட்டுள்ளார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், வையாவூர் அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட தகுதியான 2 மணமக்கள் ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் இன்று பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி பிரசித்தி பெற்ற வையாவூர் பிரசன்ன வெங்கடேஸ்வர திருக்கோவில் வளாகத்தில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய் அவர்கள் தலைமையில் செயல் அலுவலர் மேகவண்ணன், ஆய்வாளர் வேல் நாயகன் ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் திருமணம் செய்து கொண்ட 2 ஜோடிகளுக்கும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க தாலி, கட்டில்,பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. திருமண விழாவில் ஏராளமான பொதுமக்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் ஆகியோர் மணமகன் மணமகள் வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Similar News