குமரி மாவட்டம் தக்கலை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிபவர் ஆல்பிரட் (31). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து ஆல்பிரட் திருவட்டாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி ஏற்கனவே இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக திருவட்டார் போலீசார் மெர்லின் (23), அபிஷேக் ( 21) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.