தக்கலை அருகே புங்கறை என்ற பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த ஒரு தம்பதியை வழிமறித்து பைக்கில் சென்று கொண்டிருந்த 2 இளைஞர்கள் காரை நிறுத்தி தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் காரில் இருந்து வாலிபர் அர்பின் பிரின்ஸ் என்பவரை காரில் இருந்து இறக்கி அவரையும் அவரது மனைவியையும் சரமரியாக தாக்கினர். பொதுமக்கள் தகராறு தடுத்து நிறுத்தினர்.இந்த காட்சி சமூக வலைதளங்களில் நேற்று உடனடியாக பரவியது. இது குறித்து உடனடியாக விசாரிக்க தக்கலை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின் உத்திரவிட்டார். அதன் பேரில் பைக் நம்பர் அடிப்படையில் தாக்குதல் ஈடுபட்ட திக்கணக்கோடு பகுதியை சேர்ந்த ஹர்ஷர் (20 ) மூலச்சல் பகுதி டெர்ஜின் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.