சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 2 பேர் படுகாயம்
நாய் கடித்து 2 பேர் படுகாயம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பொறியாளர் ராமர் (வயது 37) தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். சங்கரன்கோவிலில் இருந்து தேவர் குளத்திற்கு சென்ற அவர் காவல் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது அங்குள்ள நாய் அவரை கடித்து குதறியது, அதே நேரத்தில் அருகில் உள்ள பன்னீர்ஊத்து கிராமத்தைச் சேர்ந்த முருகையா (வயது 66) என்பவர் சங்கரன்கோவில் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது அவரையும் நாய் கடித்து குதறியது. இருவரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.