தலைமறைவு குற்றவாளிகள் 2 பேரை பிடிக்க உத்தரவு 

புதுக்கடை;

Update: 2025-10-20 09:05 GMT
குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ரீகன். கேரள மாநிலம் நிலமேல் பகுதியை சேர்ந்தவர் ஷபீக். இவர்கள் 2 பேர் மீதும் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. 2 பேரும் நீண்ட நாட்களாக கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளனர். எனவே ரீகன், ஷபீக் ஆகிய 2 பேரையும் பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்த குழித்துறை குற்றவியல் நடுவர் எண் -2 நீதிபதி, புதுக்கடை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News