குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜமணி மனைவி சேசம்மாள்(75). இவர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விட்டு, அரசு பேருந்தில் ஏறி வீடு திரும்பினார். பஸ் வில்லுக்குறி பாலம் அருகே வந்த போது மூதாட்டி கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். உடனே பேருந்தை நிறுத்தி பஸ் ஸ்டாப் அருகே சென்று விசாரணை செய்த போது, அங்கே பேருந்தில் இருந்து இறங்கிய 2 பெண்கள் சந்தேகப் படும் படியாக நின்று கொண்டு இருந்தனர். இதனை அடுத்து இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தனர். இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆன்றோபெபின் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் சேர்ந்த பவானி (29), மீனாட்சி (29) என்பது தெரிந்தது. அவர்கள் மூதாட்டி நகையை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து நகையை கைப்பற்றி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.