தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதி நடந்த முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர் 2ம் தேதி தென்காசி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்;

Update: 2025-12-02 18:36 GMT
டிசம்பர் 2 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பணவடலில் சத்திரம் முதல் ஆலங்குளம் வரை புதிய வழித்தடத்தில் அரசு மகளிர் விடியல் பேருந்து இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. 2. நாளை திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சொக்கப்பனை அமைப்பதற்காக பனை ஓலைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 3. தென்காசியில் இருந்து வாரணாசி வரை தென்காசி மாவட்டத்திலிருந்து 15 கார்கள் புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன், ஜோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 4. வாட்ஸ் அப்பில் போலியான செய்திகளை நம்பி கிளிக் செய்யக்கூடாது என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக வலைதள பக்கத்திலிருந்து தென்காசி மாவட்ட பொது மக்களுக்கு எச்சரிக்கை பதிவு பதிவாகியுள்ளது. 5. தென்காசி மாவட்ட காங்கிரஸ் அமைப்பு மறுசீரமைப்பு இயக்க மேலிட பார்வையாளர் லக்கி தலைமையில் இன்று தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 6. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து ஆலங்குளம் வழித்தடத்தில் இன்று புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது. 7. வண்டியின் 16845 ஈரோடு டு செங்கோட்டை எக்ஸ்பிரஸ் டிசம்பர் மாதம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் மதுரை இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல வண்டியின் 16846 செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் மதுரை திண்டுக்கல் இடையே மற்றும் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 8. செங்கோட்டை மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தாயுமானவர் திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டது. 9. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எஸ் ஆர் படிவங்கள் வழங்கப்பட்டு திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 10. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று திருக்கார்த்திகை முன்னிட்டு அகல விளக்குகளை வாங்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 11. தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தமிழக அரசின் அரசாணை 62 படி குறைந்தபட்ச மாத ஊதியம் 12,792 ரூபாயை வழங்க கோரி இன்று தென்காசி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 12. அச்சம் புது பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது. இன்று பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 13. சங்கரன்கோவில் வருவாய் கூட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான கூட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 5 அன்று காலை 11 மணியளவில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. 14. குண்டாறு அணையில் தடையை மீறி இளைஞர்கள் குளித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையின் சார்பில் குண்டாறு அணையை சுற்றி பார்க்கவும் குளிக்கவும் அனுமதி இல்லாத நிலையில் இளைஞர்கள் மீறி சென்று குளித்து வருகின்றனர். 15. மேலகரம் வடகரை மடத்துப்பட்டி புல்லுக்காட்டுவலசை சொக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் திறனறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News