வேன் - லாரி மோதி கோர விபத்து, 2 பேர் பலி,15 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே வேன் - லாரி மோதி கோர விபத்து, 2 பேர் பலி,15 பேர் படுகாயம்;
திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த அய்யர்மடம் அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தேனி, உத்தமபாளையம், பூசாரிகவுண்டன்பட்டியை சேர்ந்தவர்கள் அமாவாசையை முன்னிட்டு கொடுமுடி அருகே உள்ள கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் நாமக்கல்லை சுரேஷ்(30) என்பவர் மதுரையில் இருந்து கரூர் நோக்கி ஓட்டி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் வேனில் வந்த டிரைவர் ரஞ்சித், மற்றும் வாசகர் ஆகிய 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் 15 பேரை சிகிச்சைக்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.