தளி அருகே 2 தரப்பு மோதல்- 2 பேர் கைது.
தளி அருகே 2 தரப்பு மோதல்- 2 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பா (31) கூலித்தொழிலாளி.இதே பகுதியை சேர்ந்த சென் னீரப்பா (39) இவர்கள் உறவினர்கள். இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி அன்று நஞ்சப்பா, சென்னீரப்பா மற்றும் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த சென்னீரப்பா தரப்பினர் நஞ்சப்பாவை தாக்கயதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நஞ்சப்பா தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்தனர். சென்னீரப்பா, சுரேஷ், சீனிவாஸ் ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே போல சென்னீரப்பா ஒரு புகார் அளித்தார். அதில் தானும் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன் பேரில் மாதேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். நஞ்சப்பா, அருண்குமார் (26), ராஜா (30) ஆகிய 3 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.