தமிழகத்தில் வெறிநாய் கடித்து 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழப்பு என அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பேட்டி

தமிழகத்தில் வெறிநாய் கடித்து 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழப்பு என அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார் இந்த தெரு நாய்களால் விவசாயிகள் வாழ்வாதம் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்

Update: 2024-09-30 03:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள குட்டப்பாளையத்தில் உள்ள சேனாபதி காங்கேயம் ஆராய்ச்சி மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தது என்னவென்றால் தமிழகத்தில் வெறிநாய் கடித்து 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழப்பு ஏற்படுகின்றது. ஆடு மாடு போன்ற விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளும் உயிரிழப்பு ஏற்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். காங்கேயம் அடுத்த குட்ட பாளையத்தில் தமிழக தமிழர் நல வாரியத் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளரும் கார்த்திகேயன் சிவசேனாபதி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து ஆடு,மாடு பலியாகி வருகின்றனர் இதற்கு நிரந்தர தீர்வு காண்பதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க பரிந்துரைத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இந்த 6 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 2 லட்சத்து 42,000 பேர் நாய்க்கடியால் பாதித்துள்ளதாகவும் மேலும் 22 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பாக காங்கேயம் பகுதியில் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் ஆடு,மாடு போன்ற கால்நடைகளை இந்த தெரு நாய்களால் தாக்கப்பட்டு ஆடுகள் இறந்து விடுகின்றது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது. விவசாயிகளின் இந்த வாழ்வாதார பிரச்சனையை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் இந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்கும் என்றும் தெரிவித்தார். மேலும் அதிக தெரு நாய்கள் வாழும் நாடாக இந்தியா மாறி வருகின்றது. இதில் வருத்தமான செயல் என்னவென்றால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கின்றது என்றார். இந்த நாய்களால் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டு வரும் சூழலில் மிருகங்களின் ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு வரும் ஒரு கூட்டம் இதைப் பற்றி கவலைப்படாமல் பொது இடங்கள், பீச், பார்க் ஆகிய இடங்களில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டு தெருநாய்களுக்கு உணவளிப்பது. இதுதான் மிருகத்தின் மீது அவர்கள் காட்டக்கூடிய கரிசனை என்று நினைப்பதுதான் இந்திய நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்து. அவர்களுக்கு மிருகத்தின் மீது கரிசனையும் பிரியும் இருக்கிறது என்றால் வரவேற்கத்தக்கது ஆனால் அவர்கள் வீடுகளிலே நாய் வளர்க்க வேண்டும், பூனை வளர்க்க வேண்டுமோ தவற தெருவிலே இருக்கக்கூடிய நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர். 7000 வருடங்களுக்கு முன்பு வனவிலங்காக இருந்த ஆடு, மாடு, நாய், பூனை ஆகியவற்றை வீட்டு விலங்காக மாற்றி வளர்த்து வருகின்றோம். மாடுகளுக்கு அடுத்ததாக முதல் முதலாக வனவிலங்கை வீட்டு விலங்காக மாற்றியதில் நாய். ஆகவே மனிதனுக்கு நாய்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் 2.42 லட்சம் பேர் நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த நாய் கடிகளால் 22 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னமும் இந்த வருடம் முடிவில் இது அதிகரிக்க போவதாகவும் தெரிவித்தார். அரசுக்கும் சரி சுகாதாரத் துறைக்கும் சரி சவாலான விஷயமாக இந்த நாய்க்கடி இருந்து வருகின்றது. இந்த பிரச்சினையை நிச்சயமாக முதல்வருடைய அரசு திட்டத்தை வகுத்து ஒரு நல்லதொரு முடிவை எடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Similar News