கத்தியால் வெட்டிய 2 சிறுவர்கள் உட்பட 5பேர் கைது

திண்டுக்கல்லில் 2 வாலிபர்களை கத்தியால் வெட்டிய 2 சிறுவர்கள் உட்பட 5 வேர் கைது;

Update: 2025-06-08 05:18 GMT
திண்டுக்கல், மேட்டுப்பட்டி, கல்லறைமேடு அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக குட்டிமணி (எ) சதீஷ்(32), சந்தோஷ்(23) ஆகிய 2 பேரை கத்தியால் வெட்டப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்மாயில் மகன் அப்பாஸ்(21), ஜான்கென்னடி மகன் பிரவீன்லியாஸ்(20), ஆரோக்கியசாமி மகன் யேசுராஜ்(40) மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News