கோவையில் ஆசிரியர்கள் மீது பாலியல் சீண்டல் புகார் – 2 பேர் மீது வழக்கு, 5 பேர் இடமாற்றம் !

கிணத்துக்கடவு பள்ளி சம்பவம் : பாலியல் புகார் – கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை.;

Update: 2025-08-26 16:34 GMT
கோவை கிணத்துக்கடவு அரசு மேல் நிலைப் பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி புகாரின் அடிப்படையில் இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேவேளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி விசாரணை மேற்கொண்டு, பள்ளி நிர்வாக காரணங்களையும் கருத்தில் கொண்டு ஐந்து ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்தார்.

Similar News