அரவக்குறிச்சி -2 வாகனங்கள் மோதி விபத்து.7-பேர் படுகாயம்.
அரவக்குறிச்சி -2 வாகனங்கள் மோதி விபத்து.7-பேர் படுகாயம்.;
அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவில் ஆம்னி மற்றும் பொலிரோ பிக் அப் வாகனங்கள் மோதி விபத்து 7 பேர் படுகாயம். கரூர் மாவட்டம் , நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு மகன் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32) , சரவணன் (46), ஈரோடு மாவட்டம் , பிட்டபள்ளாபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் (38), திருச்சி மாவட்டம் , வெள்ளைப்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து (52),கரூர் மாவட்டம் தலையூரை சேர்ந்த ஜெகநாதன் (34) ஆகியோருடன் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது, திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த விஜய் (24) என்பவர் அருகிலுள்ள ஜியபுரத்திலிருந்து கேரளா செல்ல பொலிரோ பிக் அப் வாகனத்தில் வாழைத்தார் லோடு ஏற்றி கொண்டு அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது, ஆம்னி வேனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி வேன் மற்றும் பொலிரோ பிக் அப் வாகனங்களில் பயணம் செய்த ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.