ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு..*

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு..*;

Update: 2025-02-23 15:46 GMT
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு.. விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் அருகே கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குப்புசாமி(58). தனியார் மில்லில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். குப்புசாமி கோயம்புத்தூரில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக கடந்த செவ்வாய் கிழமை மனைவியுடன் சென்றார். இந்நிலையில் குப்புசாமியின் வீட்டு கதவு திறந்து கிடப்பதாக உறவினர் செல்போனில் தகவல் அளித்துள்ளார்.குப்புசாமி வீட்டிற்கு வந்து பார்த்த போது, சிசிடிவி கேமரா, கதவு மற்றும் பீரோவை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விருதுநகர் எஸ்.பி கண்ணன் நேரில் ஆய்வு செய்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இதே பகுதியில் மேலும் இரு வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. ஸ்டாலின் ஆட்சியில் தொடர் காவல்துறையினரின் மெத்தனத்தால் கொள்ளை சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Similar News