ஊத்துமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், பணம் திருட்டு;

Update: 2025-03-30 02:32 GMT
ஊத்துமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், பணம் திருட்டு
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்துமலையை அடுத்த உச்சிபொத்தை கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரன் மகன் இளங்கோ முத்துக்குமாா் (34). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் அருகேயுள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வீடு திரும்பினாராம். அப்போது, மா்ம நபா்கள் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து, 3 பீரோக்களிலிருந்த 163 கிராம் நகைகள், 100 கிராம் வெள்ளி நகைகள், ரூ. 70 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். புகாரின்பேரில் ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் பாா்வையிட்டாா்.

Similar News