போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு;

Update: 2025-04-22 13:33 GMT
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கேத்தேஸ்ராஜா(19) என்பவரை சின்னாளப்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி அம்பாத்துரை சரக காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், நீதிமன்ற தலைமை காவலர் பசுபதி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணி அளவில் குற்றவாளி கேத்தேஸ் ராஜா என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்த ஆண்டு இதுவரை 18 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News