தோகூர் கிளையில் கொடியேற்று விழா  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 20 பேர் இணைந்தனர்

அரசியல்;

Update: 2025-05-19 15:33 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், தோகூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.  அப்போது, மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, ஒன்றிய நிர்வாகி கே.பத்மநாபன் தலைமையில், 20 க்கும் மேற்பட்டோர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அபிமன்னன் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  தொடர்ந்து தோகூர்  கிளையில் கொடியினை கே.அபிமன்னன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எம். இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருஞானசம்பந்தம், பன்னீர்செல்வம், மற்றும்  எம்.துரைராஜ், குமார், நவநீதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News