கரூரில் -ஜூன் 20 ல் வேளாண் கருவிகளின் செயல்முறை குறித்து விளக்க முகாம்-விவசாயிகள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு.

கரூரில் -ஜூன் 20 ல் வேளாண் கருவிகளின் செயல்முறை குறித்து விளக்க முகாம்-விவசாயிகள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு.;

Update: 2025-06-17 10:47 GMT
கரூரில் -ஜூன் 20 ல் வேளாண் கருவிகளின் செயல்முறை குறித்து விளக்க முகாம்-விவசாயிகள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு. கரூர் மாவட்டத்தின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஜூன் 20 காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் & கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் முகாம் நடைபெற உள்ளது. இதில் வேளாண் இயந்திரங்கள் & கழிவுகளை இயக்குதல் & பராமரித்தல் செய்யக்கூடியது , செய்யக்கூடாதது குறித்தும் , பராமரிக்கும் முறைகள் குறித்தும் தெளிவுரைகளும் விளக்க உரைகளும் அரசு துறை அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் விளக்க உள்ளனர்.மேலும் புதுமையான வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதால் விவசாயிகள் இந்த முகாமில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News