சிவகங்கையில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கையில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன;
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.61,140 /- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் சீதாலெட்சுமி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.