அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் காலியாகவுள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

Update: 2024-07-23 01:31 GMT
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மேம்பட்ட CNC மெஷினிங் டெக்னிஷியன்அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர்சரிபார்ப்பாளர், மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர், பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கணினி இயக்குபவர் போன்ற தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள்,காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை, இலவச மிதிவண்டி, இலவச சீருடைகள், இலவச காலணி, வரைபடக் கருவிகள், நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 750 உதவித்தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750 உதவித்தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100 சதவீதம் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழகத்தின் மிகப்பெரியநிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785, 97900 93723, 73739 49660 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News