ரன் ஃபோர் நேஷன் 2025 – கோவையில் விழிப்புணர்வு மாரத்தான் !

கோவை VGM மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து ரன் ஃபோர் நேஷன் 2025 என்ற தலைப்பில் முழங்கால் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.;

Update: 2025-07-28 07:47 GMT
கோவை VGM மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து ரன் ஃபோர் நேஷன் 2025 என்ற தலைப்பில் முழங்கால் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் போட்டி நேற்று நடத்தப்பட்டது. கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 4000 பேர் பங்கேற்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள், விளையாட்டு கிளப்புகள் இணைந்து நடத்தியன. கரூர் வைஸ்யா வங்கி, CRI பம்ப்ஸ், SSVM, SNS, ஸ்ரீ சக்தி, ரத்தினம், நேரு குழுமங்கள், ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் மாவட்டம் 3201, யங் இந்தியன்ஸ், பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன், பீனிக்ஸ் கிளப், யூனிப்ரோ, வாஸவி கிளப் உள்ளிட்ட பலரும் இதில் பங்குபெற்றனர். 150 மாற்றுத்திறனாளிகள் இருசக்கர நாற்காலியில் பங்கேற்று விழாவின் முக்கிய அம்சமாக இருந்தனர். இந்த நிகழ்வு, ஆரோக்கிய வாழ்வை ஊக்குவிக்கும் விதமாகவும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்துடனும் நடைபெற்றது.

Similar News