தமிழக வேளாண் பட்ஜெட் 2025-26 முக்கிய அம்சங்கள்
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார்.;
MRK Panneerselvam
தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்... > உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் > பட்டியல், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளின் பொருளாதாரத் சுமையினைக் குறைக்கும் திட்டத்துக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு. > இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திட இயற்கை வேளாண்மைத் திட்டங்கள் உருவாக்கப்டும். > உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும். > உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் > உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்துக்கு விவசாயிகளுக்கு முழு மானியம் வழங்கப்படும். > ரூ.52.44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும். > ரூ.108.6 கோடி ஒதுக்கீட்டில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் தொடங்கப்படும். > ரூ.40.27 கோடியில் மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகாிக்க “மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்” தொடங்கப்படும். > கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு >தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். > 100 முன்னோடி விவசாயிகளை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். > இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ரூ.841 கோடியில் பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கப்படும். > பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட “பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்” உருவாக்கப்படும். > விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும். > ரூ.42 கோடி கோடியில் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். > பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க “தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை” உருவாக்கப்படும். > டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்படும் > மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும். > மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். > நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவு தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. > 2023-24ல் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. > தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. > 57,000 விவசாயிகளுக்கு ரூ.510 கோடியில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. > கடந்த நிதியாண்டில் 172 ஒழுங்குமுறை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. > விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. > தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.