கரூர்-சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 25,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கரூர்-சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 25,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.;

Update: 2025-11-21 11:59 GMT
கரூர்-சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 25,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கரூர் அடுத்த வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு நடைபெற்ற 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 25,000- மரக்கன்றுகள் நடும் விழா கரூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர்கள் கரூர் சரகம் சுபாஷினி , குப்பிச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் செயலாளர் கௌசல்யா மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடவு செய்வதற்காக வைத்திருந்த மரக்கன்றுகளை முதலில் பார்வையிட்டனர். பிறகு கூட்டுறவு சங்க வளாகத்தில் மரங்களை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி துவக்கி வைத்தனர். இதே போல ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கும் 250 - மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது

Similar News