கூட்டணியை பொதுச்செயலாளர் எடப்பாடியார் பார்த்துக் கொள்வார் 2026 இல் எடப்பாடியார் முதல்வராவது நிச்சயம் பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு
கூட்டணியை பொதுச்செயலாளர் எடப்பாடியார் பார்த்துக் கொள்வார் 2026 இல் எடப்பாடியார் முதல்வராவது நிச்சயம் பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம்மேற்கு ஒன்றிய அஇஅதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் குமாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பூத் கமிட்டி உறுப்பினர்கள் குறித்த ஆய்வை சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரபுஆய்வு செய்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து எடுத்துக் கூறினார்.கூட்டத்தில் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் ராதா தமிழ்மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முரளி, மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் பரணிதரன், தனசேகரன் ஆகியோர் உள்ளிட்ட பாக முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டமுன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமான கூட்டணியை அமைக்கும் வேலையை பொதுச் செயலாளர் எடப்பாடி பார்த்துக் கொள்வார்.அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னால் போதும் பாக முகவர்களாக இருக்கிற நீங்கள் முழுமையாக உழைத்தால் கடந்த தேர்தலில் வெறும் 1,500 வாக்கு பெறாததால் தோல்வியுற்ற நாம் இந்த முறை அதிகப்படியான வாக்குகளில் வெற்றி பெறுவோம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெல்வது நிச்சயம்.தமிழகம் முழுவதும் திமுகஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது எடப்பாடி யார் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராவது நிச்சயம் என கூறினார்.