திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வண்ணத்துப்பூச்சி சுமந்து வருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 புத்தாண்டு
Dindigul;
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் 2025-ம் ஆண்டிற்கான நன்றி திருப்பலியும், 2026-ம் ஆண்டிற்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி அளவில் ஆலய பலிபீடத்தில் இருந்த 2025-ம் ஆண்டு மறைந்த பின் வண்ணமயமான எண்ணங்களுடன் வளமான புதிய ஆண்டு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் வண்ணத்துப்பூச்சி 2026-ம் புதிய ஆண்டை சுமந்து வருவது போன்று புத்தாண்டு பிறந்தது. வித்தியாசமான முறையில் காட்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது மேலும் ஆலயத்தில் புத்தாண்டு பிறந்த போது அனைவரும் கர ஒலி எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர் மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்