துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு 45ம் ஆண்டு நினைவஞ்சலி
விவசாயிகளுக்கு 45ம் ஆண்டு நினைவஞ்சலி;
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் குறிஞ்சா குளத்தில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி 31.12.1980ம் ஆண்டு நடந்த ஆர்பாட்டத்தில், நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அதே கிராமத்தை சார்ந்த 5 விவசாயிகள் பலியானதை தொடர்ந்து வீரவணக்க நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் எம்எல்ஏ திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் முத்துச்செல்வி திமுக நிர்வாகிகளுடன் சென்று தியாகிகளின் நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்