ஆண்டி படத்தில் 2.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஆண்டிமடம் ஒன்றியத்தில் 2.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்;

Update: 2025-06-07 14:08 GMT
அரியலூர் ஜூன்.8- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் : 2025 - 2026, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் : 2025-2026, சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டம் : 2024 - 2025,ஆகிய திட்டங்களின் கீழ், நாகம்பந்தல் ஊராட்சியில் - ரூ 8.52 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் ஏரி புனரமைப்பு பணி, .பெரியகருக்கை ஊராட்சியில் - ரூ5.69 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இராங்கியம் ஊராட்சியில் - ரூ15.83 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி ஏரி புனரமைப்பு பணி, கவரப்பாளையம் ஊராட்சியில் - 12.16 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, .ஆண்டிமடம் ஊராட்சியில் - 12.84 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், விளந்தை ஊராட்சியில் - 30.25 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலைகள் மற்றும் ஏரி புனரமைப்பு பணிகள், .பெரியகருக்கை ஊராட்சியில் - 38.95 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி திருக்களப்பூர் ஊராட்சியில் - 32.18 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை, மற்றும் கிராம ஊராட்சி செயலகம் கட்டுமான பணி, கோவில்வாழ்க்கை ஊராட்சியில் - 46.97 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை, சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, கதிரடிக்கும் களம், அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணி, கூடுதல் 2.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் (வ.ஊ), அன்புச்செல்வன் (கி.ஊ),மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மேரி,உமாதேவி, ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரெங்க.முருகன் மற்றும் ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,கிளை கழகத் தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News