அரசு உதவி பெறும் பள்ளியில் வள்ளலாரின் 21 வது பிறந்தநாள் விழா

Update: 2023-10-06 05:17 GMT

பிறந்தநாள் விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமாரபாளையம் சிஎஸ்ஐ பள்ளியில் இயங்கி வரும் மகாத்மா காந்தி மாலை நேர பயிலகத்தில் வள்ளலார் பிறந்த தினத்தில் அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது.

தலைமை விடியல் பிரகாஷ் முன்னிலை தலைமையாசிரியர் சுகந்தி, எஸ் எஸ் எம் கலை கல்லூரி பேராசிரியர்கள் சங்கரராமன் மற்றும் மஞ்சுளா ஆகியோர் கலந்துகொண்டு வள்ளலாரின் சிறப்புகளை மாணவர்களிடையே சிறப்பாக பேசி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதாகக் கூறினர்.

Advertisement

இந்நன்னாளில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் வினாடி-வினா போட்டியில் வைத்து மாணவிகளுக்கு பரிசு புத்தகங்களை விடியல் பிரகாஷ் மற்றும் நலவாரிய செல்வராஜ் வழங்கினர். மேலும் மாணவ மாணவிகள் தாய், தந்தை, ஆசிரியர்கள் சொல்படி நடப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாலை நேர வகுப்பு ஆசிரியர்கள் ராணி, சித்ரா, ஜமுனா, மற்றும் தீனா, உதவிகரம் அங்கப்பன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News