பொன்னேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 21 வது வார்டு பகுதி மக்கள் முற்றுகை
குடிநீர் குடிப்பதற்கு ஏதுவாக இல்லாமல் ஒரு வித வாசனை வீசியதை அடுத்து பொன்னேரி 21வது வார்டு பொதுமக்கள் பாட்டிலில் மாசடைந்த நீரினை எடுத்து வந்து நகர்மன்ற கூட்டத்தில் முற்றுகை;
பொன்னேரி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் இன்று நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது இதில் 21 வது வார்டு பகுதியில் குடிதண்ணீர் ஒருவித வாசனை வருவதாக கூறி குடிப்பதற்கு தரம் இன்றி உள்ளதால் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கைகளில் குடிநீர் பாட்டிலுடன் வந்து நகர்மன்ற கூட்டத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது