மயானம் அருகே 21,000 மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது.
மயானம் அருகே 21,000 மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது.;
மயானம் அருகே 21,000 மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது. கரூர் மாவட்டம் , வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது குறித்து காவல் ஆய்வாளர் முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 20ம் தேதி காலை 9;15-மணியளவில் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்பகுதியில் மயானம் அருகே உள்ள முள்தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பதுக்கிய கஞ்சாவை மீட்டு மதிப்பிட்டபோது சுமார் 2 கிலோ 100 கிராம் எடை கொண்ட 21 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா ,ரூ.500 மற்றும் டூவீலர் பறிமுதல் செய்து இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த மண்ட மனோஜ் ,செல்வ நகரை சேர்ந்த ஜோகிதார் வயது 24 இருவரையும் கைது செய்து ஜூலை 4 ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.