தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 212 வழக்குகளில் ரூ18கோடியே 82 லட்சத்து 472 மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 212 வழக்குகளில் ரூ18கோடியே 82 லட்சத்து 472 மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-09-14 16:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேசிய மக்கள் நீதிமன்றம் 212வழக்குகளில் ரூ18கோடியே 82லட்சத்து 472மதிப்பில் தீர்வு தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 212 வழக்குகளில் ரூ18கோடியே 82 லட்சத்து 472 மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது. தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1 தேசிய மக்கள் நீதிமன்றம்  தொடங்கப்பட்டது.  தாராபுரம் வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி சக்திவேல் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன் உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி,மற்றும் மாஜிஸ்டிரேட் த.உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 22, உரிமையியல் வழக்குகள் 39 குற்றவியல் சிறு வழக்குகள் 147, வங்கி வாராக்கடன் வழக்கு 04, மொத்த வழக்குகள் 212 இதன் மொத்த மதிப்பு ரூ 18கோடியே 82லட்சத்து472 ஆகும் .மேலும் வங்கி கடன் வழக்கு 26, இதன் மதிப்பு ரூ 29லட்சத்து61ஆயிரத்து700, போன்றவைகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. 522 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர்.  வழக்கறிஞர்கள். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பணியினை வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News