ரூ .22 லட்சம் மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா திறப்பு விழா
ரூ .22 லட்சம் மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா திறப்பு விழா;
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ .22 லட்சம் மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா 7-வது வார்டில் உள்ள கற்பகாம்பாள் நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டது. இந்த சிறுவர் பூங்காவை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலக்ஷ்மிம் மதுசூதனன் திறந்து வைத்தனர். நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ராமுஜிஜேந்திரன், கே.பி.ஜார்ஜ் ,7-வது வார்டு கவுன்சிலர் நக்கீரன், நகராட்சி ஆணையாளர் சந்தானம், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ், வார்டு கவுன்சிலர்கள் ஸ்ரீமதிராஜி, ரவி, சதீஷ்குமார், ஜெயந்தி ஜெகன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஆனந்தன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.