தஞ்சாவூரில், ஆக.22 இல், உயர் கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம்

முகாம்;

Update: 2025-08-20 16:40 GMT
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.  இதன் மூலம் உயர் கல்வி சேரும் மாணவர்கள், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், ஏதிலியர் முகாமில் வாழும் மாணவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோர்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்க்கையில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து தீர்வு காணும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங்கம் அறை எண்.10-இல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் வருகின்ற ஆக.22 வெள்ளியன்று காலை 10 மணி முதல் மதியம் 1ய மணிவரை உயர்கல்வி வழிகாட்டி மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.  இதனை உயர்கல்வியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News