புன்னம் சத்திரம்- 22 வது வருடாந்திர விளையாட்டு போட்டி ஒலிம்பிக் தீபத்துடன் பேரணி.

புன்னம் சத்திரம்- 22 வது வருடாந்திர விளையாட்டு போட்டி ஒலிம்பிக் தீபத்துடன் பேரணி.;

Update: 2025-08-23 08:19 GMT
புன்னம் சத்திரம்- 22 வது வருடாந்திர விளையாட்டு போட்டி ஒலிம்பிக் தீபத்துடன் பேரணி. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா புன்னம்சத்திரம் பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியின் 22 வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு இன்று புன்னம்சத்திரம் பேருந்து நிறுத்த பகுதியில் இருந்து பள்ளி வளாகம் வரை ஒலிம்பிக் தீபத்துடன் பேரணி நடைபெற்றது. பேரணியில் பள்ளி மாணவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுத்து சென்றது காண்போரை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் பெரியசாமி,தலைவர் பாண்டியன்,பரமக்குடி அரசு கலை கல்லூரியில் உடற்கல்வித்துறையைசேர்ந்த டாக்டர் எஸ் பிரசாத் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.

Similar News