ஏரோ டைனமிக்ஸ் - ரோபோட்டிக்ஸ் பயிற்சி பெற்ற 220 மாணவர்களுக்கு
பாராட்டு சான்றிதழ் வழங்கி ஆத்மா குழு தலைவர் பாராட்டு;
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், அமெரிக்க - இந்திய நிறுவனம் சார்பில், 2 நாட்கள் மாணவர்களுக்கான ஏரோ டைனமிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் பயிற்சி நடைபெற்றது. 6- ம் வகுப்பு முதல் 9-ம் ஒன்பதாம் வகுப்பு வரை படிப்பில் 220 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு, பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமெரிக்க- இந்திய நிறுவனத்தின் திட்ட அலுவலர் சே.சூரியமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆத்மா குழு உறுப்பினர் மரிய சார்லஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மைதிலி நன்றி கூறினார்.