கோவை: 22000 ரூபாய் மோசடி- சிசிடிவி காட்சிகள் வைரல் !

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் உள்ள அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நடந்த 22,000 ரூபாய் மோசடி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-05-30 01:35 GMT
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் உள்ள அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நடந்த 22,000 ரூபாய் மோசடி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருட்களை வாங்கிய ஒரு மர்ம நபர், கடையின் உரிமையாளர் பி.பி. சம்சுதீனிடம், சில்லறை நோட்டுகள் என்னிடம் நிறைய இருக்கின்றன, சில்லறை தருகிறேன் என்று கூறி, கடையில் பணிபுரியும் ஒருவரை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். பெட்ரோல் பங்கில் சில்லறை இருப்பதாக கூறி, கடை ஊழியரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பெட்ரோல் நிலையம் வரை சென்றுள்ளார் அந்த மர்ம நபர். பெட்ரோல் பங்க் வாசலில் கடை ஊழியரை இறக்கிவிட்ட அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது இந்த மோசடிக்காரர் கடைக்கு வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.

Similar News