போக்சோ வழக்கில் நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டு ஆயுள் தண்டனை. வழங்கி கரூர் நீதிமன்றம் தீர்ப்பு.
போக்சோ வழக்கில் நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டு ஆயுள் தண்டனை. வழங்கி கரூர் நீதிமன்றம் தீர்ப்பு.;
போக்சோ வழக்கில் நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டு ஆயுள் தண்டனை. வழங்கி கரூர் நீதிமன்றம் தீர்ப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த சிறுமியை , அந்த கல்லூரியின் முதல்வாரன குளித்தலை காவிரி நகரை சேர்ந்த செந்தில்குமார் வயது53 என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டு இன்று வரை திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்தார். இவ்வழக்கு கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, இன்று நர்சிங் கல்லூரியின் முதல்வாரன செந்தில்குமார்க்கு போக்சோ குற்றத்திற்காக 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7,00,000/- நிவாரணம் அளிக்க கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மகிளா நீதிமன்றம்) நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற குற்றவாளியை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.