திருப்பரங்குன்றத்தில் 23ஆம் தேதி நவராத்திரி விழா தொடக்கம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் வரும் 23ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்குகிறது;

Update: 2025-09-15 03:39 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரும் செப்..23ம் தேதி துவங்கி அக்.2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முதல் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து நவ.26ல் பாட்டாபிஷேகம், 27ல் திருக்கல்யாணம் நடைபெறும்.நவராத்திரி விழாவினை தொடர்ந்து பசுமலையில் உள்ள மண்டபத்திற்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி, அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும்

Similar News