மக்கள் நீதிமன்றம் மூலம் 2,327 வழக்குகள் தீர்வு

திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,327 வழக்குகள் தீர்வு;

Update: 2025-09-14 11:55 GMT
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது. வழக்குகளை 14 அமர்வுகளில் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். மொத்தம் 2,327 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் தீர்வுத்தொகையாக ரூ. 19,81,98,931 வசூலிக்கப்பட்டது.

Similar News