கரூர் மாவட்டத்தில் 233.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 233.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் 233.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக ஏப்ரல் 16ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு திடீரென கரூர் மாவட்டத்தை சூழ்ந்த கருமேகங்கள் சிறிது நேரத்தில் மழையாக பொழிந்தது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கரூரில் 23.40 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 93.00 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 29.00 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 11.60 மில்லி மீட்டர், குளித்தலையில் 8.20 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில் 33.50 மில்லி மீட்டர், மாயனூரில் 23.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 4.50 மில்லி மீட்டர், கடவூரில் 3.00 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 4.00 மில்லி மீட்டர் என மொத்தம் 233.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 19.43 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.