அரபு அவுலியா தர்கா 236 வது உரூஸ் விழா
வேடசந்தூர் அரபு அவுலியா தர்கா 236 வது உரூஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி பி பி பரமசிவம்;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரபு அவுலியா தர்கா உள்ளது. ரம்ஜான் மாதத்தில் உரூஸ் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து இன்று 236 வது உரூஸ் விழா கோலாகலமாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் அதிமுக மாநில இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி பி பி பரமசிவம் கலந்து கொண்டார். மேலும் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், வேடசந்தூர் பேரூர் கழக செயலாளர் பாபு சேட், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சேட்டை கார்த்தி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நிலா தண்டபாணி, நகர சிறுபான்மை பிரிவு அணி செயலாளர் முகமது அலி, சர்க்கரை பாபா, நகர இளைஞரணி செயலாளர் மீரா மைதீன், நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் சேக் அப்துல்லா, நகர பாசறை செயலாளர் பாண்டிய கணேஷ், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திவாகர் மண்டப புதூர் கிளைச் செயலாளர் விநாயகா வீரா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.