தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2,360 விவசாயிகள் 4.57 கோடி மதிப்பீட்டில் மானியம் பெற்று பயன் பெற்றுள்ளனர்.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நாற்றுகள், டிராகன் பல சாகுபடி, வெங்காய கொட்டகை அமைத்தல், நீர் சேமிப்பு அமைப்பு, நிலப் போர்வை, இயற்கை இடுப்பொருட்கள், சிப்பம் கட்டும் அறை உள்ளிட்ட திட்டங்களில் 2,360 விவசாயிகள் 4.57 கோடி மதிப்பீட்டில் மானியம் பெற்று பயன் பெற்றுள்ளனர்;
பெரம்பலூர் மாவட்டம் கடந்த ஆண்டு தோட்டக்கலை துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2,360 விவசாயிகள் 4.57 கோடி மதிப்பீட்டில் மானியம் பெற்று பயன் பெற்றுள்ளனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர், அரணாரை, எளம்பலூர், மேட்டுப்பாளையம், கைகளத்தூர், ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று (05.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் விதைப்பரிசோதனை நிலையத்தில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் உற்பத்தி, செயல்பாடு, தரம் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்கள், விநியோகிக்கப்படும் முறைகள், விலை, மானியம் விபரம், ஆண்டொன்றுக்கு எத்தனை விவசாய குடும்பங்கள் இதன் மூலம் பயன்படுகின்றன என்பன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அரணாரை கிராமத்தில் சத்தியகுமார் த/பெ. பெரியசாமி என்ற விவசாயின் 4 ஏக்கர் பரப்பளவில் ஏடிபி 45 ரக நெல் பயிரிடப்பட்டுள்ள நெல் விதை பண்ணை வயலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து விதை நெல்மணிகளை விதைப்பரிசோதனை ஆய்வகம் மூலமாக பரிசோதித்து பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தினார். அம்மாபாளையம் கிராமத்தில் வேளாண்மை பொறியியல்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்னைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து இக்குட்டையின் மூலமாக மழைக்காலங்களில் சேகரிக்கப்படும் மழைநீர் இதன் மூலமாக பயன்பெறும் பாசனக்கிணறு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தோட்டக்கலைத் துறையின் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எளம்பலூர் கிராமத்தில் கல் பந்தல் மூலமாக டிராகன் பல செடி பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து டிராகன் பழம் பயிரிடப்படுவதற்கு செலவு விவரம், அரசின் சார்பாக வழங்கப்படும் மானியம் வருடத்திற்கு எவ்வளவு விளைச்சல் இருக்கும் அதன் மூலமாக எவ்வளவு வருமானம் கிடைக்க பெறும் என்பது குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார் இதற்கு விவசாயி கூறுகையில் குறைந்த ஆட்கள் செலவில் ஒருமுறை முதலீடாக 10 வருடம் அறுவடை செய்யும் வகையில் டிராகன் பழம் உற்பத்தி இருக்கும் இதனால் வருடத்திற்கு குறைந்தது 05 முதல் 10 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கப்பெறும் என்று தெரிவித்தார் வருமானம் அதிகம் கிடைக்க பெறும் இத்தோட்டக்கலைப் பயிர் பின்பற்றி மற்ற விவசாயிகளுக்கும் தெரியப்படுத்தி அதிக லாபம் கிடைக்க வழிவகை செய்யுமாறு தோட்டக்கலைத்துறை அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். பின்னர் வேப்பந்தட்டை வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், மேட்டுப்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்ற விவசாயி 5.0 ஏக்கர் பரப்பளவில் நெகிழி மூடாக்கு மற்றும் சோலார் விளக்கு பொறி அமைத்து முலாம்பழம் சாகுபடி செய்துள்ள வயலினையும், மற்றும் கை.களத்தூர், பெருநிலா கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெகிழி மூடாக்கு அமைத்து தர்பூசணி பயிரிடப்பட்டுள்ள பழனிமுத்து- பிரபாகரன் ஆகியோரின் வயல்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பழ சாகுபடி மூலம், கிடைக்கப்பெறும் வருமானம், இப்பயிர்களின் சாகுபடி கால விபரம், பழம் விற்பனை உள்ளிட்டவைகளை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு தோட்டக்கலை துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நாற்றுகள், டிராகன் பல சாகுபடி, வெங்காய கொட்டகை அமைத்தல், நீர் சேமிப்பு அமைப்பு, நிலப் போர்வை, இயற்கை இடுப்பொருட்கள், சிப்பம் கட்டும் அறை உள்ளிட்ட திட்டங்களில் 2,360 விவசாயிகள் 4.57 கோடி மதிப்பீட்டில் மானியம் பெற்று பயன் பெற்றுள்ளனர் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் காய்,கனி பயிர்களை விவசாயிகள் பெருமளவில் பயிரிட்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே.) பொ.ராணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மு.சத்யா, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் அசோக்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் (நடவு பொருள்) சு.செல்வபிரியா மற்றும் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், அலுவலர்கள், , உதவி அலுவலர்கள் உதவி விதை அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.