காஞ்சிபுரத்தில் வரும் 24ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் 24ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

Update: 2025-01-22 11:09 GMT
தமிழக அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஜனவரி 24ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கல்வி சான்றிதழ், புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி உள்ளார்.

Similar News